காதலர் தினம் வேண்டாம்…ரூட்டை மாற்றிய கவின்.! ஏன் தெரியுமா?

kavin - star

நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது.  டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கவின் நடிக்கும் தனது நான்காவது படமான ‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழு 2024 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தை வெளியிட திமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகினது.

ஏற்கனவே, பியர் பிரேமா காதல் எனும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படத்தை இயக்கிய இளன் கண்டிப்பாக இந்த படத்தையும் இளைஞர்களை கவரும் வகையில் எடுத்திருப்பார் என்றும், இதனால், காதலர் தினத்தன்று வெளிவரவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் முன்கூட்டியே பிப். 9ம் தேதியே இந்தப்படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இதனால், காதலர் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ப்ரோமஷன் பணிகள் 2024ல் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப்புக்கு ஆறுதல் சொன்ன கவின்-சினேகன்!

இதற்கிடையில், அவரது ஐந்தாவது படத்தின் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் மூலம்  நடன இயக்குனர் நடிகர் சதீஷ் கிருஷ்ணனின் இயக்குனராக அறிமுகமாகிறார். கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடிக்க மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்