தமிழை தவிர எந்த மொழிக்கும் இடமில்லை : தமிழக அரசு திட்டவட்டம்
2017 முதல் தமிழகத்தில் பத்திரபதிவு இணையத்தில் பதிவேற்றம் செய்ய தொடங்கியது. இணைய பத்திரபதிவு தொடங்கியபோது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பதிவேற்றம் செய்யபட்டது.
பிறகு இந்த இணையதளம் மேம்படுத்தப்பட்ட போது, தமிழில் மட்டுமே பதிவேற்றம் செய்யும் படி வடிவமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் பிரகாஷ் ராஜ் என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதியிடம், தமிழக அரசு ‘தமிழ் மொழியை தவிர ஆங்கிலம் மொழியை பதிவேற்றம் செய்யமுடியாது’ எனதிட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை 30ஆம் தேதி தள்ளிவைத்தார்.
DINASUVADU