D50-ஐ தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கும் தனுஷ்! இசையமைக்க போவது யார் தெரியுமா?

dhanush

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து தற்போது தன்னுடைய 50-வது படத்தை இயக்கி வருகிறார். தாற்காலிகமாக D50 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் அந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இதனை தவிர இந்த படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் மொட்டை போட்டுகொண்டு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். படத்தை அவர் இயக்குவது மட்டுமின்றி அந்த திரைப்படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சைலண்டாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து படத்தின் ரிலீஸ் தேதி குறித்த  அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் தற்போது பிரபலம் ஒருவர் அறிவித்துள்ளார். அது மட்டும் இன்றி அந்த திரைப்படத்திற்கு தான் தான் இசையமைப்பாளர் எனவும் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளராக கலக்கி வரும்  ஜிவி பிரகாஷ் தான்.

அதை செய்யும் போது தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ! மிருணாள் தாகூர் வேதனை!

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனுஷ் சார் டி-50 திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். அந்த திரைப்படத்திற்கு நான் இசையமைக்க போகிறேன்” என தெரிவித்துள்ளார். இதில் கூடுதலான தகவல் முக்கிய வேடத்தில் ஜிவி உறவினர் மற்றும் தனுஷ் கேமியோவில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. கோபுரம் பட நிறுவனம் படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேலும், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே சமயம் D50 படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 51-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்