இன்று சென்னை உட்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Today Chennai rain report

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பெய்த அதீத கனமழையால் சென்னை புறநகர் பகுதி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு முழுதாக திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மழை நின்று 4 நாட்களாகியும் இன்னும் பல்வேறு இடங்களில் மழைநீர் வடியாத நிலை தொடர்கிறது.

சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இந்த பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

புயல் ஓய்ந்த பின்னரும் சென்னையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இன்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை சுற்றுவட்டாரம் தவிர்த்து, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், ராமநாதபுரம் என 15 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைநீர் பாதிப்படைந்த பகுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்