சன்னி லியோனுக்கு வந்த கூட்டத்தை தனக்கு வந்த கூட்டமாக காட்டும் ஆர்.எஸ்.எஸ்.- பாஜக அமித் ஷா.
தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை உயர்த்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பதற்காக அங்கு எம்.பி.க்கள் யாரும் இல்லாத போதும் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கண்ணன்தானத்திற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி, அதைக் கண்டித்து அங்கு “மக்கள் யாத்திரை”(ஜன் ரக் ஷ யாத்திரா) என்ற பெயரில் 15 நாட்கள் பிரசார யாத்திரையை நடத்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்தது.
இந்த யாத்திரை முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான பையனூரில் இருந்து நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதனை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.ஆனால் அந்த கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள் சுமார் 700 வரை இருக்க கூடும் ஆனால் கேரளா பிஜேபி தொண்டர்களும் அதன் தலைவர்களும் கவர்ச்சி நடிகை கொச்சி வந்தபோது அவரை காண வந்த கூட்டத்தை தனக்கு வந்த கூட்டமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு காட்டியிருக்கிறார்கள்.
இதனால் பலர் சமூக வலைத்தளங்களில் பிஜேபி கட்சியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ட்விட்டரில் அமித்ஷா ஜி…
யோகி ஜி…
#Knappanyogi
#Alavalathishaji
#Alavalathireturns என்றும் பதிவிட்டும்விமர்சித்து வருகின்றனர்.