ரூ.909-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்.! எண்ணற்ற பலன்களுடன் ஜியோவின் புது பிளான்.!

Jio

இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ.909க்கு ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏர்டெல், வோடபோன் என  எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால் செய்ய முடியும்.

அது மட்டுமல்லாமல் புதிய ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும். தினசரி 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பிக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு 84 வரை வேலிடிட்டி உள்ளது. இந்த திட்டத்தில் இவ்வளவுதான் உள்ளது என்று பார்த்தால், அதுதான் இல்லை. இன்னும் பல அம்சங்கள் உள்ளது.

இந்த திட்டத்தில் பிரபலமான ஓடிடி தளங்களுக்கான சப்ஸ்கிரிப்ஸனானது வழங்கப்படுகிறது. அதன்படி ஜியோவின் பயன்பாடுகளான ஜியோ நியூஸ், ஜியோ டிவி, ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கும், சோனி லீவ் (SonyLiv) மற்றும் ஜீ5 (Zee5) பயன்பாடுகளுக்கும் சப்ஸ்கிரிப்ஸனை வழங்குகிறது.

5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவானது வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ சினிமா பிரீமியம் ஆனது ஜியோ சினிமாவிற்கான சப்ஸ்கிரிப்ஸனில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல அனைத்து நெட்வொர்க் அன்லிமிடெட் கால் சரி வாங்க கூடிய 2 திட்டங்கள் ஜியோவில் உள்ளன.

ரூ.269 ரீசார்ஜ் திட்டம்

அதில் முதலாவதாக ரூ.269-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். அதோடு ஜியோ சாவன் ப்ரோ, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்றவற்றுக்கு சப்ஸ்கிரிப்ஸன் உள்ளது. மேலும், அன்லிமிடெட் 5 ஜி டேட்டா வழங்கப்படும்.

ரூ.533 ரீசார்ஜ் திட்டம்

இரண்டாவதாக ரூ.533 என்ற திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய செய்தால், 56 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவானது வழங்கப்படும். இதிலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்றவற்றிற்கான சப்ஸ்கிரிப்ஸன் வழங்கப்படும். அதோடு அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவும் வழங்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்