எத்தனால் தயாரிக்க கரும்பை பயன்படுத்த தடை… மத்திய அரசு அதிரடி உத்தரவு!
எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகளை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் உத்தரவில், சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புச் சாற்றையோ, கூழையோ எத்தனால் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எத்தனால் தயாரிப்பதற்கு கரும்பை பயன்படுத்த தடை விதித்துள்ளது மத்திய அரசு. அதன்படி, எத்தனால் விநியோக ஆண்டு (ESY) 2023-24இல் எத்தனால் உற்பத்திக்கு கரும்பு சாறு அல்லது சர்க்கரை பாகை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யார் முதல்வர்? ராஜஸ்தானில் தொடர் இழுபறி… சொகுசு விடுதிகளில் பாஜக எம்எல்ஏக்கள்!
இந்த தடையை விதித்து நுகர்வோர் விவகார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சர்க்கரை நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக எரிபொருளுடன் கலப்பதற்கு போதுமான எத்தனால் இருப்புக்கள் கிடைப்பது குறித்து இந்த நடவடிக்கை கவலை அளிக்கிறது.
மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க முயற்சியின் முக்கியமான அம்சமான எரிபொருளுடன் கலப்பதற்கு எத்தனால் இருப்புக்கள் போதுமான அளவு கிடைக்குமா என்ற அச்சத்தை எழுப்புகிறது. நடப்பு பருவத்துக்கான உயிரி எரிபொருளை உற்பத்தி செய்ய கரும்பு சாற்றை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.