பப்லுவை கழட்டிவிட்ட ஷீத்தல்! காரணத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!

bablu and sheetal bayilvan ranganathan

நடிகர் பப்லூ பிரித்விராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஷீத்தல் என்ற 23 வயது பெண்னை காதலித்து  இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. ஆனால், திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இருவரும் காதலிப்பதாக அறிவித்தார்கள்.

ஆனால், சமீப காலமாக அவர்கள் இருவரும் ஒன்றாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஒன்றாக பங்கேற்கவில்லை. அடிக்கடி இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடுவது உண்டு. ஆனால் சில நாட்களாகவே வெளியாகவில்லை. எனவே இருவருக்கும் இடையே பிரச்சனை உள்ளது என்பது தெளிவாக தெரியவும் வந்தது,

இந்த நிலையில், நடிகர் பப்லுவை அவருடைய காதலியான ஷீத்தல் எதற்காக பிரிந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே என்னதான் பிரச்சனை நடந்தது என்பது பற்றி ஒரு பேச்சு ஓடிகொண்டிருக்கும் சமயத்தில் அவர்களுடைய பிரிவுக்கு இது தான் காரணம் என நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய டி சினிமா சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

பறந்தது இளம் காதலி…பப்லுவை பிரிந்த ஷீத்தல்? திடீரென என்னாச்சு? வெளியான திடுக்கிடும் தகவல்.!

இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” பப்புலுவுடைய கோபம் அவருடைய முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துவிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சில வயது குறைவான ஷீத்தல்  என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டார். அந்த பெண்ணும் பப்லு சினிமாகாரன் நிறைய பணம் வைத்து இருப்பான் என்று காதலித்து.

இருவரும் ஆசைப்பட்ட பிறகு இருவருக்கும் இடையே எல்லாமே முடிந்துவிட்டது. பிறகு பப்லு அவரிடம் நீ என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்க அதற்கு ஷீத்தல்  சம்மதம் தெரிவித்தார். பிறகு இரண்டு பெரும் தாலி காட்டாமல் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார்கள். இப்போது திடிரென்று ஷீத்தல்  நான் பப்லுவை விட்டு பிறந்துவிட்டேன் என்று கூறினார்.

அதற்கு காரணம் பப்லு ஆசைக்காக மட்டுமே ஷீத்தல்லை பயன்படுத்தி கொண்டார்.  திருமணம் செய்து கொள்வோம் என்று முதலில் கூறிவிட்டு பிறகு திருமணம் செய்யவே யோசித்தார். தன்னுடைய மகனையும் அப்படியே ஒரு பக்கம் வளர்த்துக்கொண்டும் இருந்தார். தன்னுடைய சுயநலம் பற்றி மட்டுமே பப்லு யோசித்து வந்தது ஷீத்தல்க்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை விட்டு ஷீத்தல்  பிரிந்துவிட்டார். இதனை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்பதால் தான் பப்லு எந்த விஷயத்தையும் பற்றி பேசாமல் அமைதியாக இருக்கிறார்” எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list