16ஜிபி ரேம்..50எம்பி கேமரா..5,400mAh பேட்டரி.! ரியல்மீ ஜிடி 5 ப்ரோ அதிரடி அறிமுகம்.!
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளாரான ரியல்மீ, கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டுடன் கூடிய ஜிடி சீரிஸில் ரியல்மீ ஜிடி 5 என்கிற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இதன் ப்ரோ மாடலில் வேலை செய்து வந்த ரியல்மீ, தற்போது புதிய ரியல்மீ ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இதில் இருக்கக்கூடிய டிஸ்பிளே, கேமரா, பிராசஸர் குறித்த விவரங்களைக் காணலாம்.
டிஸ்பிளே
இதில் 2780 × 1264 பிக்சல்கள் (1.5K) ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் ஓஎல்இடி பிஓஇ அமோலெட் கர்வ்டு டிஸ்பிளே (OLED BoE AMOLED Display) உள்ளது. இந்த டிஸ்பிளே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360 முதல் 2160 ஹெர்ட்ஸ் வரையிலான டச் சம்ப்ளிங் ரேட்டைக் கொண்டுள்ளது.
வெயில் நேரத்தில் தெளிவாக பார்க்க 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் ப்ரோ எச்டிஆர் சப்போர்ட் இருப்பதால் வீடியோக்கள் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். நீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க ஐபி64 ரேட்டிங், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.
50எம்பி கேமரா..33W சார்ஜிங்.! ரியல்மீயின் புது மாடல்..எப்போது அறிமுகம் தெரியுமா.?
பிராசஸர்
அட்ரினோ 740 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் ரியல்மீ ஜிடி 5 ப்ரோவில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிப்செட் 98% ஃபாஸ்ட் பர்ஃபார்மென்ஸ், 240 எஃப்பிஎஸ் மற்றும் 40% ஹார்ட்வர்களை பூஸ்ட் செய்யக் கூடியது. அட்ரினோ ஜிபியு 25% ஃபாஸ்டர் கிராஃபிக்ஸை வழங்கக்கூடியது.
இதில் AI செயல்திறன் 98% அதிகரித்துள்ளது. மொபைல் ஹீட் ஆவதைக் குறைக்க 12000mm² பரப்பளவு கொண்ட 3VC ஐஸ்பெர்க் அல்டிமேட் கூலிங் சிஸ்டம் உள்ளது. இதனால் கேம் விளையாடும்போது நம்மால் ஹீட்டை அவ்வளவாக உணர முடியாது. இந்த சிஸ்டம் சிபியு வெப்பநிலையை 21.8 ° செல்சியஸ் வரை குறைக்கக் கூடியது.
இதில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான புதிய ரியல்மீ யுஐ 5.0 உள்ளது. இதற்கு 4 வருட செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் மற்றும் 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும் என ரியல்மீ நிறுவனம் உறுதியளித்துள்ளது.
கேமரா
கேமராவைப் பொறுத்தவரை டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய சோனி LYT808 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் ஆப்டிகல் & எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் உடன் கூடிய சோனி IMX890 சென்சார் கொண்ட 50 எம்பி டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா உள்ளது.
இந்த ஓஐஎஸ் அம்சத்தினால் நடுக்கங்கள் ஏதும் இல்லாமல் புகைப்படங்களை கேப்சர் செய்ய முடியும். அதோடு சோனி IMX355 சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைட் கேமராவும் உள்ளது. முன்புறத்தில் செல்ஃபிக்காக சோனி IMX615 சென்சார் கொண்ட 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
வெறும் ரூ.9,999 பட்ஜெட்..8ஜிபி ரேம்..5000 mAh பேட்டரி.! உலகளவில் அறிமுகமானது ரெட்மி 13சி 5ஜி.!
பேட்டரி
ரியல்மீ ஜிடி 5 ப்ரோவில் 5,400 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பொருத்தப்ப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டுடன் கூடிய 100 வாட்ஸ் வயர்டு சூப்பர்வோக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் போனை 0% விலிருந்து 50% சதவீதம் சார்ஜ் செய்ய 12 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதோடு 50 வாட்ஸ் ஏர்வோக் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும், வைஃபை 7, புளூடூத் 5.4, டூயல் ஃப்ரீக்வென்ஸி ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி 3.2 சப்போர்ட் உள்ளது.
ஸ்டோரேஜ் மற்றும்
ரியல்மீ ஜிடி 5 ப்ரோ ஆனது 16 ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் (LPDDR5x) மற்றும் 1 டிபி வரையிலான யுஎஃப்எஸ் 4.0 (UFS 4.0) இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் ஆனது மற்ற ரேம்களுடன் ஒப்பிடும்போது சிறந்த செயல்திறனை வழங்குகிறது. இது கிட்டத்தட்ட 6.4Gbps இலிருந்து 8.5Gbps வேகத்தில் டேட்டா ட்ரான்ஸ்ஃபெர் செய்யும்.
அதேபோல யுஎஃப்எஸ் 4.0 ஆனது 1 டிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதில் ரீட் ஸ்பீட் ஒரு வினாடிக்கு 4.2 ஜிபி ஆகவும், ரைட் ஸ்பீட் ஒரு வினாடிக்கு 2.8 ஜிபி ஆகவும் இருக்கும். ரெட் ராக் (லெதர் ஃபினிஷ்), பிரைட் மூன் (லெதர் ஃபினிஷ்) மற்றும் ஸ்டாரி நைட் (மேட் ஃபினிஷ்) ஆகிய நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.
விலை
ரியல்மீ ஜிடி 5 ப்ரோவில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட 4 வேரியண்ட்டுகள் உள்ளன.
இதில் 12 ஜிபி ரேம் வேரியண்ட் விலை 3,399 யுவான் (ரூ.39,830) ஆகவும், 16 ஜிபி ரேம் வேரியண்ட் விலை 3,699 யுவான் (ரூ.43,345) ஆகவும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை 3,999 யுவான் (ரூ.46,860) ஆகவும், 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை 4,299 யுவான் (ரூ.50,375) ஆகவும் விற்பனைக்கு உள்ளது.