டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டின் சிறந்த நபராக டெய்லர் ஸ்விஃப்ட் தேர்வு.!

Taylor Swift

பிரபல அமெரிக்க பத்திரிகையான டைம்ஸ் நாளிதழ், இந்த ஆண்டுக்கான 2023 சிறந்த நபருக்கான தேர்வை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டது. அதில், அமெரிக்க கிராமி விருது பெற்ற பிரபல பாடகியான டெய்லர் ஸ்விஃப்டை இந்த ஆண்டின் சிறந்த நபராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

இது குறித்து டைம்ஸ் நாளிதழ், “ஒரு கலைஞராக டெய்லரின் ஸ்விஃப்ட்டின் சாதனைகள்-கலாச்சார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும்-எவ்வளவு உள்ளன. அவற்றை விவரிப்பது பெரிதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Taylor Swift (@taylorswift)

தனது 14 வயதில் பாடல் எழுதத் தொடங்கிய டெய்லர் ஸ்விஃப்ட் தற்போது 33 வயதில் டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டின் சிறந்த நபராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். டெய்லர் ஸ்விஃப்ட் பிரபல அமெரிக்க பாடகி ஆவார்.  மேலும் இவர் முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவராகவும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பாடல்களை எழுதி பிரபலமானவர்.

இந்த வருடத்தின் மூன்றாவது மொக்க படம் DUNKI.! ஷாருக்கான் கொடுத்த பதிலடி.!

இவரது பாடல்கள் உலகளவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் விற்கப்பட்ட நிலையில், சிறந்த விற்பனையான இசைக்கலைஞர்களில் ஒருவராகவும் உள்ளார். அதுமட்டும் இல்லாமல், Spotify மற்றும் Apple Music ஆகியவற்றில் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட மற்றும் இதுவரை அதிக வசூல் செய்த பெண் கலைஞர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்