முதலீடு செய்ய அழைப்பு.. ரத்தன் டாட்டாவையும் விட்டுவைக்காத டீப் ஃபேக் வீடியோ!

Ratan Tata

கடந்த சில காலமாக AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக நாம் விரும்பும் நபர்களை அப்படியே உருவாக்கும் (டீப் ஃபேக்) வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், அண்மையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகியது.

இதுதொடர்பாக பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து இதனை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட  அந்த வீடியோ AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மத்திய அரசு இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால், அதனை பெரிதுபடுத்தாமல் பல்வேறு பிரபலங்களை போல AI மூலம் உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில், நடிகை ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து, ஆலியா பட், கஜோல் உள்ளிட்டோரின் போலியான ஏஐ வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையாகின. அதுமட்டுமில்லாமல், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மறைந்த பிரபாகரனின் மகள் துவாரகா பெயரில் பெண் ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதும் அப்படி இருக்குமா அல்லது உண்மையானதா என கேள்விகள் எழுந்தன.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்… ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் நான்கு இந்தியர்கள்!

துவாரகா வீடியோவில் நம்பகத் தன்மை இல்லை என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது, இல்லாத ஒருவர் இருப்பதாக வெளியான வீடியோ டீப் ஃபேக் வீடியோ என கூறப்பட்டது. இதுபோன்று, பல்வேறு பிரபலங்களை போல AI மூலம் உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதில், ரத்தன் டாட்டாவையும் டீப் ஃபேக் வீடியோ விட்டுவைக்கவில்லை.

சமீபத்தில் தொழிலதிபர் ரத்தன் டாடா முதலீடு செய்ய அழைப்பு விடுக்குமாறு உரையாற்றிய வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில்,  ஒரு திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்யும்படி ரத்தன் டாடா மக்களை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. உதவிகேட்டு லட்சக்கணக்கான செய்திகள் எனக்கு வருகின்றன.

எனது மேலாளர் சோனா அகர்வாலுடன் சேர்ந்து, நான் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளேன். இந்த திட்டத்தில் சேருவதற்கு நீங்கள் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று ரத்தன் டாடா கூறியதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த வீடியோ டீப் ஃபேக் வீடியோ என தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவை யாரும் நம்ப வேண்டாம் தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்