கொழும்பு – தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் துவங்க இலங்கை சம்மதம்…!

Default Image

கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் மீண்டும்பயணிகள் கப்பல் சேவை துவங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இலங்கை அமைச்சரவையில் துறைமுகங்கள் மற்றும்கப்பல் சேவைகள் அமைச்சர்மகிந்த சமரசிங்க இந்தசேவையை ஆரம்பிக்க அனுமதி கோரும் ஆவணங்களை முன்வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை – இந்திய சுற்றுலாப் பயணிகள் நலன் கருதிஏற்கெனவே மும்பையைச்சேர்ந்த நிறுவனமொன்றினால் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை 2011 ஜூன்மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.1200 பயணிகள் பயணிக்க கூடிய அக்கப்பல் வாரத்தில் இரு நாட்கள் சேவையில் ஈடுபட்டது. எதிர்பார்த்தவாறு பயணிகள், கப்பல் பயணத்தில் நாட்டம் கொள்ளாத நிலையில் அதேஆண்டு நவம்பர் 18ஆம் தேதியுடன் சேவை நிறுத்தப்பட்டது. இந்த கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவே அமைச்சர் மகிந்த சமரசிங்க அமைச்சரவையில் அது தொடர்பான ஆவணங்களை முன்வைத்திருந்தார்.

“இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை இரு மக்களுக்கிடையில் நெருக்கமான தொடர்பினையும் கலாச்சார மற்றும்பொருளாதார தொடர்புகளையும் மேம்படுத்துவதற்கு உதவுவதோடு இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சாரபொருளாதார தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் வர்த்தகம், சுற்றுலா மற்றும்புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் சந்தர்ப்பத்தை வழங்கும்,” என அமைச்சர் மகிந்த சமரசிங்க தனது அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்திருக்கின்றார்.இந்த சேவை தொடர்பாகஇலங்கை – இந்திய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்