திமுக நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா …!உண்மையை உடைத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ….!

Default Image

கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக சார்பில் பங்கேற்பவர்கள் குறித்து  புதிய தகவல் ஒன்றை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் ஆகஸ்ட் 17, 19, 25, 26, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.
அதே போல், ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.திமுக நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பாஜக தலைவர் அமித் ஷாவின் இந்த வருகையில் திமுகவில் சலசலப்பு ஏற்படுள்ளது.அதேபோல் அதன் கூட்டணி கட்சியுமான காங்கிரசும் கலக்கத்தில் உள்ளது.
ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என்ற தகவல் அதிக அளவில் வெளியாகி வருகின்றது.இருந்தாலும் தமிழக பாஜக அதை மறுத்து வந்தது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தலில் நிதின் கட்கரி, முரளிதரராவ் பங்கேற்கின்றனர் என்று தெரிவித்துள்ளார் .
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்