தமிழுக்கு வரும் மற்றுமொரு பாலிவுட் வில்லன்:
பாலிவுட் நட்சத்திரங்கள் தமிழில் வில்லனாக நடிப்பது தான் இப்போது ட்ரெண்டிங். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் உபன் படேல். கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பூமராங் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
உபன் படேல் இந்தியில் 36 சைனா டவுன், நமஸ்தே லண்டன், சக்கலக்க பூம், ரன் போலா ரன், ஒன் டூ த்ரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி பிக் பஸ்ஸ்ஸ் பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் புகழ் பெற்றவர். பூமராங் படத்திற்கு அர்ஜுன் ரெட்டி புகழ் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேகா ஆகாஷ், இந்துஜா, சுஹாசினி மணிரத்தினம், சதிஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.