கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி சாவு ..!
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வைராகுடியிருப்பை சேர்ந்த ராஜன், இவர் ஆட்டோ டிரைவர் இருந்து வருகின்றார் . இவருடைய மகன் ஆரோன் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் ஆரோன் நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றார். மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜன் குடும்பத்தினர் , சக நண்பர்களிடம் விசாரித்தார்.அப்போது,ஆரோன் பண்ணையூர்பாலம் அருகே பொழிமுகம் பகுதியில் ஆற்றில் குளித்து கொண்டிருந்ததை பார்த்ததாக நண்பர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பண்ணையூர்பாலம் பகுதியில் உள்ள பொழிமுகம் பகுதிக்கு சென்றார். அங்கு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆற்றில் இறங்கி ஆரோனை தேடினார். அப்போது, ஆரோன் சேற்றில் சிக்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆற்றில் குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால், ஆரோன் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
DINASUVADU