லாரி மீது கார் மோதி..! 3 பேர் பலி..!கடலூர் அருகே பரிதாபம்..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
திருவையாறு பகுதியைச் சேர்ந்த அப்பு என்பவர் தனது குடும்பத்தினருடன் திருத்தணி சென்று விட்டு மீண்டும் காரில் திருவையாறு நோக்கி வந்து கொண்டிருந்த போது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகே கழுதூர் என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்தது இதனால் காரின் முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மிக வேகமாக மோதியது.
லாரி மீது மோதியதில் காரில் பயணம் செய்த அப்பு, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகன் கண்ணன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அப்புவின் மகள் காமாட்சி, ஓட்டுனர் நெடுங்குமரன் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
DINASUVADU