புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

Narendra Modi

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாகசென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி, பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக உள்ளது. ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், பல இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல்  தெரிவிக்கின்றனர். தண்ணீரை அகற்றும் பணி, மீட்பு பணியில் மத்திய, மாநில பேரிடர் குழுக்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.

மிக்ஜாம் புயல்.! தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவை புரட்டி போட்ட கனமழை.!

புயல் மற்றும் மழையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், மிக்ஜாம் புயலால், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருடன் தான் எனது எண்ணங்கள் உள்ளன.

புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவிப்பதாகவும், புயலால் பாதித்தவர்களுக்கு உதவ அதிகாரிகள், மீட்புக்குழுவினர் அயராத உழைத்து வருகின்றனர். மேலும், இயல்பு நிலை திரும்பும் வரை தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் நிவாரணப் பணி தொடரும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்