நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு விவாகரத்தா? பரபரப்பை கிளப்பிய செய்தி!

aishwarya rai and Abhishek Bachchan

பாலிவுட் சினிமாவில் பிரபலங்கள் குறித்த வதந்தி தகவல் பரவுவது ஒன்று புதிதான விஷயம் இல்லை. அந்த வகையில், தற்போது பாலிவுட்டையே பதற வைத்த ஒரு செய்தி என்றால் ஐஸ்வர்யா ராயின் விவாகரத்து செய்தி தான். உலக அழகி என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் செய்துகொண்ட பிறகு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை ஆராத்யாவை பெற்றுக்கொண்டார்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து நடைபெற்று இருப்பதாகவும், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் பாலிவுட் சினிமாவில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் கொடுத்த வரவேற்பு! பாடகர் யுகேந்திரனுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்!

இந்த விவாகரத்து செய்தி பரவிய தகவல்க்கு முக்கிய காரணம் என்னவென்றால், பாலிவுட் சினிமாவில் தன்னுடைய தகவலை மூலம் சர்ச்சையை கிளப்பி விடும் உமர் சந்த் தான் இந்த செய்தியை கிளப்பி விட்டு இருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் ஐஸ்வர்யா ராய் -அபிஷேக் பச்சன் ஜோடி விவகாரத்து பெற்றுவிட்டதாக கூறியுள்ளார்.

அபிஷேக் பச்சன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவருடைய கையில் மோதிரம் இல்லை எனவே அவருடைய விவாகரத்து செய்தி உண்மை தான் என்று புகைப்படங்களை வெளியீட்டு சிலர் தகவலை பரப்பி வருகிறார்கள். மேலும், ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு தன்னுடைய மகள் மற்றும் நடிகை ஜெனிலியா இருவருடன் இணைந்து ஜாலியாக அந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடி கொண்டு இருந்தார்.

எனவே, விவாகரத்து ஆகிவிட்டது என்றால் எப்படி இப்படி ஜாலியாக இருப்பார் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.  விவாகரத்து குறித்து பரவும் தகவல் பற்றி  விளக்கத்தை ஐஸ்வர்யா ராய் கொடுப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும், இதற்கு முன்பே கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பற்றிய விவாகரத்து செய்தி ஏற்கனவே வெளியாகியும் இருக்கிறது அதற்கு இது எல்லாம் வதந்தி என ஐஸ்வர்யா ராய் விளக்கமும் கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar