2019 நாடளுமன்ற தேர்தல் 3 அணி..! தேவையில்லாத ஒன்று..!சிபிஎம் பாலகிருஷ்ணன்..!!
தமிழகத்தில் நடந்து வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில் நீர்மேலான்மை தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்திட வேண்டும் மேலும் 100 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள அணைகளை பராமரிக்கப்பட்டு அதனை பாதுகாத்திட வேண்டும்
மேலும் பேசிய அவர் பாலியல் புகாருக்கு உள்ளான லஞ்ச ஒழிப்புதுறை காவல்துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.விசாக கமிட்டியில் பெண் எஸ்பிலஞ்ச ஒழிப்புதுறை காவல்துறை அதிகாரி மீது புகார் கொடுத்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற தேர்தலை பற்றி கூறிய அவர் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி என்பது தேவையில்லாத ஒன்று, அது பாஜகவிற்கு தான் சாதகமாக அமையும்.என தெரிவித்தார் மேலும் பேசிய அவர் கேரள மக்களுக்கு வெள்ளபாதிப்பு ஏற்பட்ட போது மனிதநேய அடிப்படையில் உதவி செய்தது வரவேற்கத்தக்கது என சிபிஎம் பாலகிருஷ்ணன் நெல்லையில் தெரிவித்தார்.
DINASUVADU