சளி இருமலுக்கு இந்த ரசம் வைங்க.? சளியும் காலி ரசமும் காலி.!
உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு இந்த கொள்ளு பயிருக்கு உண்டு, இந்த கொள்ளு பயிரை வேகவைத்த தண்ணீரை கீழே சிந்துவிடாமல் அதிலே ரசம் வைப்பது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சீரகம் – 2 ஸ்பூன்
- மிளகு – ஒரு ஸ்பூன்
- பூண்டு – 5 பள்ளு
- வர மிளகாய் – 3
- புளி – நெல்லிக்காய் அளவு
- கொள்ளு வேகவைத்த தண்ணீர் – ஒரு கப்
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- நல்லெண்ணெய் – இரண்டு ஸ்பூன்
- கடுகு – அரை ஸ்பூன்
- பெருங்காயம் – கால் ஸ்பூன்
செய்முறை
சீரகம், மிளகு, பூண்டு வர மிளகாய் ஆகியவற்றை கொரகொரப்பாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். புளிக்கரைசலை கரைத்து அதிலே அரை தக்காளியை பிழிந்து விட்டு மஞ்சள் தூள், கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
தம்மா துண்டு கடுகுல இவ்வளவு விஷயம் இருக்கா.? இது தெரியாம போச்சே.!
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய், கடுகு ,வரமிளகாய் சேர்த்து பொரிந்ததும் பொடித்து வைத்துள்ளவற்றை சேர்த்து கிளறவும். பின்பு புளி கரைசலை சேர்த்து சூடு ஆனதும் கொள்ளு தண்ணீரையும் சேர்த்து கொதி வருவதற்கு முன்பே அடுப்பை அணைத்து விட வேண்டும். அதன் பிறகு தண்ணிர்சேர்க்க கூடாது, கொதிக்க விடக்கூடாது. இப்போது சத்தான கொள்ளு ரசம் ரெடி.
பயன்கள்
உடல்நிலை சரியில்லாத நேரத்தில் எதையும் சாப்பிட தோன்றாத மனநிலை இருக்கும். குறிப்பாக சளி, காய்ச்சல் ,இருமல் இருக்கும்போது அந்த உணர்வு அனைவருக்குமே தோன்றும். அந்த நேரங்களில் இந்த ரசத்தை செய்து கொடுத்தால் நாவிற்கும் உடம்புக்கும் இதமாக இருக்கும். நெஞ்சு சளிக்கு நல்ல பலனை கொடுக்கும்
‘இளைத்தவனுக்கு எள்ளும் கொழுத்தவனுக்கும் கொள்ளையும் கொடு’ என்பது பழமொழி. இந்த பழமொழி கிணங்க ஒருவர் உடல் எடை குறைவாக இருந்தால் அவருக்கு எள்ளு கொடுத்தால் உடல் எடை அதிகரிக்கும். அதுவே உடல் பருமனாக இருப்பவருக்கு இந்த கொள்ளை கொடுக்கலாம்.
இந்த கொள்ளு உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி கொழுப்பை குறைக்கும். இதனால் உடல் எடை குறையும். உடல் வலிமைக்கும் தசை இருக்கத்திற்கும் சிறந்தது .
தவிர்க்க வேண்டியவர்கள்
இந்த கொள்ளு பயிறு உடலில் சூட்டை அதிகரிக்கக் கூடியது. மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் தவிர்ப்பது சிறந்தது. மேலும் உடல் சூடு உள்ளவர்கள் குறைந்த அளவு எடுத்துக் கொண்டு வரலாம்.
குதிரையின் பிரதான உணவு இந்த கொள்ளு பயிர் ஆகும். குதிரையின் பலம் நமக்கு வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையேனும் இந்த கொள்ளு பயிரையும் ரசத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.