நடிகை கங்கனா யாருக்கோ தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிவிட்டு என் மீது பழிபோடுகிறார் பதுங்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார்….!
மும்பை: நடிகை கங்கனா யாருக்கோ தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிவிட்டு என் மீது பழிபோடுகிறார் என்று பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது முன்னாள் காதலர் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தபோது ஆரம்பித்தது இந்த சண்டை. அதில் இருந்து ரித்திக்கும், கங்கனாவும் மோதிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில் கங்கனா பற்றி ரித்திக் கூறியிருப்பதாவது,
இரண்டு பிரபலங்களுக்கு இடையே 7 ஆண்டுகளாக தொடர்பு இருந்து அதற்கு ஒரு ஆதாரமும் இல்லை என்பது நம்பும்படி இல்லை. மீடியாவிடம் கூட எந்த ஆதாரமும் இல்லை. இது எப்படி சாத்தியம்.
அந்த நடிகை கூறிய புகாரை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே விட்டது தான் நான் செய்த தவறு. அந்த நடிகையை நான் ஒரு முறை கூட தனியாக சந்தித்து பேசியது இல்லை.
படங்களில் மட்டும் தான் இருவரும் சேர்ந்து நடித்துள்ளோம். ஆனால் தனிமையில் சந்தித்தது கூட இல்லை. அது தான் உண்மை. ஜனவரி 2014ம் ஆண்டு பாரீஸில் நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லும் நேரத்தில் நான் அங்கு இல்லை. என் பாஸ்போர்ட்டை பார்த்தால் தெரியும்.
இது காதலர்களுக்கு இடையேயான சண்டை இல்லை. அவர் அனுப்பியதாக சொல்லும் 3 ஆயிரம் இமெயில்கள் எனக்கு வரவில்லை. என் செல்போன்கள், லேப்டாப்புகளை சைபர் செல்லிடம் அளித்துள்ளோம். ஆனால் அவர் ஏன் அப்படி செய்யவில்லை.
யாரோ என் பெயரில் இமெயில் ஐடி கிரியேட் செய்து அவருக்கு காதல் பொங்க இமெயில் அனுப்பியிருக்கிறார். அதை பார்த்து அவர் தனது நிர்வாண புகைப்படங்களை இமெயில் செய்துள்ளார். நான் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. உண்மையை தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் ரித்திக்.