2015ல் இருந்ததைவிட நிலைமை மிக மோசம்…கொந்தளித்த நடிகர் விஷால்!

Vishal - Chennai mayor

சென்னையில் பெய்துவரும் மழையில் தனது வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.

மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தில் சென்னை தற்போது திணறி வருகிறது. சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் தற்போது வெகுவாக குறைந்து சென்னையை விட்டு விலகி மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

டிசம்பர் 4 நேற்று (திங்கள்கிழமை) இரவு முழுவதும் சென்னையில் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை மற்றும் விமானங்கள் நிறுத்தும் பகுதி முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலரது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அந்த வரிசையில், தற்பொழுது நடிகர் விஷால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், வெள்ளத்தைத் தடுக்கும் மழைநீர் வடிகால் திட்டம் குறித்து சென்னை மேயரிடம் கேள்வி எழுப்பினார். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், உங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

பொதுமக்கள் சேவை செய்வது இருக்கட்டும், சென்னை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வெளியே வந்து உதவு செய்யுங்க. மழைநீர் வடிகால் திட்டத்தை எங்கு ஆரம்பித்து, எங்கு முடித்தார்கள் என தெரியவில்லை. அனைத்து தொகுதி எம்.எல்.ஏ-க்களும், அரசாங்க ஊழியர்களும் வெளியே வந்து மக்களுக்கு உதவ வேண்டும்.

ராக்கி பாய்க்கு ஜோடியாகும் சாய் பல்லவி! யாஷ்19 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

2015இல் இருந்ததைவிட தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. 24 மணி நேரமாக மின்சாரம் இல்லை. எனது வீட்டில் உள்ள வயதானவர்களும் பயத்தில் உள்ளனர். நாங்கள் வரி கட்டுகிறோம், எதற்காக கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2015 இல் நாங்கள் துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவ சாலைகளுக்கு வந்தோம், ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் மோசமான நிலையைப் பார்ப்பது பரிதாபமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிலைமை சீரடையவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்