அடேங்கப்பா! கசகசாவில் இவ்வளவு விஷயம் இருக்கா.? இது தெரியாம போச்சே..

kasa kasa

இந்திய உணவுகளில் முக்கிய இடம் இந்த கசகசாவுக்கு உண்டு சுவைக்காகவும் பல மருத்துவ குறிப்புகளுக்காகவும் இந்த கசகசா பயன்படுகிறது குறிப்பாக அசைவ உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படுகிறது இந்த கசகசா பற்றிய தெரிந்ததும் தெரியாது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பயன்கள்

கசகசாவில் உள்ள லினோலிக் ஆசிட் தோலுக்கு ஈரப்பதத்தை தருகிறது .

கால்சியம் பொட்டாசியம் மெக்னீசியம் தாமிரம் அயர்ன் போன்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு புத்துணர்வை கிடைக்கச் செய்து நரம்பு செல்களின் உற்பத்திக்கு உதவுகிறது. குறிப்பாக அறிவுத்திறன் மங்கும் குறைபாட்டை குணப்படுத்துகிறது.

கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் முறையான செரிமானத்தை உண்டாக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.

அடடே!தக்காளியை வைத்து இப்படி கூட செய்யலாமா?..

உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த கசகசா மருத்துவத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

மன அழுத்தம்

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒன்று . இந்த மன அழுத்தத்தை உண்டு பண்ணும் காட்டி சோலை குறைக்க கசகசா முக்கிய பங்கு வகிக்கிறது.

தூக்கமின்மை

மன அழுத்தம் இருந்தாலே தூக்கம் தடைபடும். வெதுவெதுப்பான பாலில் கசகசாவை அரைத்து கலந்து இரவு உறங்கும் முன் குடித்து வந்தால் நல்ல தூக்கத்தை பெறலாம்.

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்

தேங்காய் துருவல் பிடித்த நாட்டு சக்கரை மற்றும் கசகசாவை கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.

அம்மை நோய் தழும்பு

அம்மை உண்டான தழும்பு மறைய நீண்ட நாட்கள் ஆகும் இது விரைவில் மறைய 10 கிராம் அளவு கசகசா ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் விரைவில் மறையும்.

தேமல் மற்றும் படை

கசகசாவை தேங்காய் பாலில் அரைத்து தேமல் மற்றும் படை உள்ள இடத்தில் தடவி வர விரைவில் குணமாகும்.

அழகு குறிப்பு

கசகசா இரவில் ஊற வைத்து அரைத்து பால் மற்றும் பச்சைப்பயிறுடன் கலந்து முகத்தில் பூசி குளித்து வர முகம் பொலிவு பெறும்.

வயிற்றுப்போக்கு

உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு குணமாக கசகசாவை சிறிது எடுத்து வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

தொடர்ந்து அழும் குழந்தைகளுக்கு கசகசாவை அரைத்து தொப்புளை சுற்றி தடவவும். மேலும் இது குடல் புழுக்களையும் அகற்றும்.

பக்க விளைவுகள்
கசகசாவை நாம் அதிகமாக உணவில் எடுத்துக் கொண்டால் ஒருவித போதையை உண்டாக்கும். எனவே அளவோடு பயன்படுத்தி ஆரோக்கியத்தை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்