சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு…!

கனமழை எதிரொலியால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு முதல் படிப்படியாக மழை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி..! திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!
இந்த நிலையில், கனமழை எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்ன அறிவிக்கப்படும் என பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்ணா மற்றும் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து, தற்போது சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிச-8 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025