வெள்ளை முடி உங்களுக்கு அதிகமா வருதா? அப்ப இந்த பதிவை படிங்க.!

WhiteHairProblem

ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை முடி அதிகமாக காணப்படும் இதனால் பல இடங்களில் கிண்டல்கள் கேளிகளுக்கு ஆளாவார்கள் , இந்த வெள்ளை முடி ஏன் வருகிறது அதை பிடுங்கலாமா கூடாதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நமது முடியின் வேர்க்கால்களுக்குள் காணப்படும் மெலனோசைட்  என்ற செல்  உள்ளது. இந்த செல் மெலனின் என்கிற நிறமியை உருவாக்குகிறது. இதுவே முடியின் நிறத்திற்கு காரணமாகிறது. இது முடிக்கு மட்டுமல்லாமல் தோலின்  நிறத்திற்கும் காரணமாகிறது. இதில் இரண்டு வகை மெலெனின்  உள்ளது யூ  மெலனின் மற்றும் பியோ மெலனின் ஆகும்.

இதில் யூ மெலனின் அதிகமாக சுரக்கும் போது கருமை நிறத்தையும் குறைவாக சுரக்கும் போது பிரவுன் நிறத்திலும் காணப்படுகிறது. அதுவே பியோமெலனின்   அதிகமாக சுரந்தால்  சிவப்பு நிறமாக காணப்படும். இப்படி மெலனின் சுரப்பதை வைத்து தான் நம் முடியும் நிறம் மாறுபடுகிறது. இதுவே மெலனின் சுரப்பதை நிறுத்திவிட்டால் வெள்ளை முடியாக  காணப்படுகிறது.

குளிர்காலத்திலேயும் உங்கள் சருமம் பளபளக்க சூப்பர் டிப்ஸ்.!

காரணங்கள்

பொதுவாக 30 வயதை கடந்து விட்டாலே மெலனின் சுரப்பை குறைத்துக் கொள்ளும். இதில் முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய மரபணு தான். மேலும் அவரவர் வாழும் சுற்றுச்சூழலும் காரணமாகிறது.

அது மட்டுமல்லாமல் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தமும் காரணம் ஆகிறது. இது நம் செல்களை டேமேஜ் செய்வதால் தேமல் போன்ற சரும பிரச்சனைகளையும் உண்டாகிறது.

தைராய்டு, ஹார்மோன் குறைபாடு, விட்டமின் பி12 ,விட்டமின் டி, விட்டமின் இ ,பயோடின் போன்ற சத்துக்கள் குறைந்தாலும் வெள்ளை முடி ஏற்படும். அது மட்டுமல்லாமல் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துவது ஹைட்ரஜன் பெராக்ஸைட் கெமிக்கல் கலந்த ஹேர் டை பயன்படுத்தினால் முடியின் வேர்க்கால்களை பாதிக்கிறது. இது செல்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் நரை முடியையும் ஏற்படுத்தும்.

நம் அதிகமாக மன அழுத்தத்தில் இருக்கும்போது நம் உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோன் முடியின் வேர்க்கால்களை பாதிப்புக்குள்ளாகிறது. அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் வெள்ளை முடிஅதிகம்  உருவாகும் .

அடடே.! மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடலை சுத்தம் செய்தால் இவ்வளவு நன்மையா.?

வெள்ளை முடியை அகற்றலாமா ? கூடாதா?

ஒரு வேர்க்கால்களில் இருந்து ஒன்று அல்லது இரண்டு முடி  உருவாகலாம். இதை புடுங்குவதால் பக்கத்தில் உள்ள முடிகளும் வெள்ளை ஆகிறது என்பது ஒரு வதந்தியாகும். உண்மை என்னவென்றால் அவ்வாறு வெள்ளை முடிகளை நாம் புடுங்கும்போது இன்ஃபெக்சன் போன்ற தொந்தரவு ஏற்படுகிறது. இது பக்கத்தில் உள்ள முடியின் வேர்க்கால்களுக்கும் பரவும். இதுவே சரியான கருத்தாகும்.

மரபணு ரீதியால் உருவானவர்களுக்கு அதற்கு தீர்வு இல்லை. உடலில் வேறு ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் ஹார்மோன் குறைபாடு தைராய்டு பிரச்சனைகள் போன்றவைகள் இருந்தால் அதை மருத்துவரின் ஆலோசனைப்படி குணப்படுத்தினால் வெள்ளை முடியை சரி செய்ய  முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்