மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்- ஆளுநர் அறிவுறுத்தல்

rn ravi

சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

நாளை 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு!

இந்த நிலையில்,  ஆர்.என்.ரவி அவர்கள், மிக்ஜாம் புயலால் நமது கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய, மாநில அரசுத்துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலைமையை மத்திய அரசும் மாநில அரசும் உயர்மட்ட அளவில் கண்காணித்து வருகின்றன. மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்