கொட்டித்தீர்க்கும் மழை..! நிரம்பி வழியும் ஏரிகள்..!

Semparampaakkam

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புயல் கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இன்று இரவு வரை தொடர்ந்து  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பி உள்ளது. ஆறு, ஏரிகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 3 தேசிய பேரிடர் குழுக்கள் வருகை.. திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 10,000 கனஅடியை எட்டிய நிலையில், நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

கனமழை காரணமாக புழல் ஏரியின் நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து 8,400 கன அடியாக அதிகரித்துள்ளது.  இன்று மாலை 4.30 மணியளவில் கொற்றலை ஆற்றுக்கு 1000 கன அடி நீர் திறந்துவிடப்படவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil llive news
thol thirumavalavan about bjp
ponmudi dmk
Lucknow Super Giants have won the toss
sneak her into boys hostel
Premalatha - Vijayakanth
TVKVijay - EPS