சென்னைக்கு 110கி.மீ தொலைவில் புயல்..! இன்று இரவு வரை மழை தொடரும்..!

Michaung Cyclone - Govt release Precautions

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை,  காஞ்சிபுரம், பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்  கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளதால், இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் பெய்த மழையால், பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையின் தரைத்தளம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மிக்ஜாம் புயல் எதிரொலி… சென்னையில் 20 விமானங்கள் ரத்து!

இந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள  பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று முற்பகல் மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாறும். 10 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வரும் நிலையில், நாளை ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் புயல் தீவிரமடையும் நிலையில், இரவு வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமைச்சர் ராமசந்திரன் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் பேசிய அவர், மழை தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்