நாகாலாந்தில் காங்கிரஸ் 5333 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி…!
கடந்த நவம்பர் 7-ம் தேதி நாகாலாந்தில் உள்ள தபி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது.
இந்நிலையில், நாகாலாந்தில் மோன் மாவட்டத்தில் உள்ள தபி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளர் வாங்பாங் கொன்யாக் அபார வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் வாங்லெம் கொன்யாக் 5,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
தபி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 10,053 வாக்குகளும், காங்கிரஸ் 4,720 வாக்குகளும் பெற்றன. கடந்த ஆகஸ்ட் 28 அன்று ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் எம்எல்ஏ நோக் வாங்னாவ்( Noke Wangnao) காலமானார். இதைதொடர்ந்து தாபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக நோக் வாங்னாவ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.