வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. மெட்ரோ ரயில் பார்க்கிங் மூடல்..!

கனமழை காரணமாக சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில்  மழைநீர் தேங்கியுள்ளதால் டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணி வரை பார்க்கிங் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கியுள்ள காரணத்தினால் வாகனம் நிறுத்துமிடம் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உடனடியாக எடுத்துக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வாகனங்களை எடுத்து செல்லாத பட்சத்தில் வாகனங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆலந்தூர், நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கை மக்கள் பயன்படுத்திக்கொள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் சென்னையில் இருந்து 250கிமீ தொலைவில் நிலை கொண்டு 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.  ‘மிக்ஜாம்’ புயலானது நாளை மறுநாள் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்