AI அசிஸ்டன்ட் உடன் அறிமுகமான அமாஸ்ஃபிட் பேலன்ஸ் வாட்ச்.! விலையை கேட்ட மிரண்டுருவீங்க.!
அமாஸ்ஃபிட் (Amazfit) நிறுவனம் அதன் புதிய அமாஸ்ஃபிட் பேலன்ஸ் என்கிற ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் வாடிக்கையாளரின் ஆரோக்கியத்தில் முழு கவனத்தையும் செலுத்தி, அவர்களின் உடல் மற்றும் இரண்டையும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் அம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி இதில் ஏஐ ஸ்லீப் மற்றும் ஃபிட்னஸ் கோச்சிங் அம்சம் உள்ளது. அமாஸ்ஃபிட் பேலன்ஸ் ஆனது 480 x 480 பிக்சல்கள் ரெசல்யூஷன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 1.5 இன்ச் (38.1 மிமீ) ஆல்வேஸ் ஆன் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. அதோடு 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டெம்பர்டு கிளாஸ் மற்றும் ஆட்டோ பிரைட்னஸ் அட்ஜஸ்ட்மென்ட் உள்ளது.
ப்ளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகமான BoAt ஸ்மார்ட்வாட்ச்.! விலை என்ன தெரியுமா.?
200க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்கள், 100க்கும் மேற்பட்ட டவுன்லோட்டட் ஆப்ஸ் கொண்ட இந்த வாட்ச் ஸ்செப் ஓஎஸ் 3.0 மூலம் இயங்குகிறது. நிலையான இணைப்புக்காக புளூடூத் 5.0, WLAN 2.4GHz உள்ளது. ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட அமாஸ்ஃபிட் பேலன்ஸ் ஆனது 150 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள், அலெக்சா வாய்ஸ் அஸிஸ்டெண்ட், காம்பஸ், காலண்டர், அலாரம் கடிகாரம் மற்றும் பைண்ட் மை டிவைஸ் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
ஹெல்த் டிராக்கிங் செய்ய கலோரி கொவுண்ட், பயோட்ராக்கர் 5.0 பிபிஜி பயோமெட்ரிக் சென்சார், பிஐஏ பயோஎலக்ட்ரிக் இம்பெடன்ஸ் சென்சார், பிளட்-ஆக்ஸிஜன் ,மெஷர்மென்ட், ஹார்ட் ரேட் மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் ஆகியவை உள்ளன. கைரோஸ்கோப், ஜியோமேக்னடிக் சென்சார், ஏர் பிரஷர் சென்சார், அம்பியண்ட் லைட் சென்சார், டெம்பரேச்சர் சென்சார் ஆகிய சென்சார்கள் உள்ளன.
இதில் இருக்கக்கூடிய 475 mAh பேட்டரி 14 நாட்கள் வரை பயன்பாட்டில் இருக்கக்கூடியது. இதை பவர் ஷேவிங்கில் 25 நாட்கள் வரையும், கடிகார பயன்முறையில் 50 நாட்கள் வரையும் பயன்படுத்தலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கியமாக இதில் ஆஃப்லைன் மியூசிக் பிளேபேக்கிற்கான 4ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் களமிறங்கும் ஒன்பிளஸ் வாட்ச் 2.! எப்போ வெளியீடு தெரியுமா.?
ஓஷன் ரிட்ஜ், மெட்டாலிக் மிலனீஸ் ஆகிய இரண்டு ஸ்ட்ராப் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஓஷன் ரிட்ஜ் ஸ்ட்ராப் ஸ்மார்ட்வாட்ச் ரூ.2,899 என்கிற விலையிலும், மெட்டல் ஸ்ட்ராப் மாடல் ரூ 2,999 என்கிற விலையிலும் அதிகாரப்பூர்வ போட் இணையதளம் மற்றும் அமேசானில் விற்பனைக்கு உள்ளது.
அமாஸ்ஃபிட் பேலன்ஸ் ஸ்மார்ட் வாட்ச் ஆனது சன்செட் கிரே மற்றும் மிட்நைட் ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகிறது. இதன் விலை ரூ.24,999 ஆகும். இது டிசம்பர் 4 ஆம் தேதி முதல் அமாஸ்ஃபிட் இணையதளம் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். தற்போது ஃபிளிப்கார்ட்டில் ரூ.30,999 என்ற விலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.