108எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.! உலகளவில் அறிமுகமானது ஹானர் எக்ஸ்7பி.!

Honor X7b

108 எம்பி கேமரா, 6000 mAh திறன் கொண்ட பேட்டரி என அசத்தலான அம்சங்களைக் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை ஹானர் (Honor) நிறுவனம் அமைதியாக அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஹானரின் மலிவு விலை ஸ்மார்ட்போனான ‘ஹானர் எக்ஸ்7பி’ (Honor X7b) உலக அளவில் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி ‘ஹானர் 90 5ஜி’ போனை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்தது. அதன்பிறகு அக்டோபர் 18ம் தேதி அதன் பிளே சீரிஸில் புதிய ‘ஹானர் பிளே 8டி’ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்த மாதம் ஹானர் எக்ஸ்7பி போனை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது.

அமலுக்கு வந்தது புதிய சிம் கார்டு விதிமுறை.! இனி இதெல்லாம் கட்டாயம்.?

டிஸ்பிளே

ஹானர் எக்ஸ்7பி ஆனது 1,080×2,412 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.8 இன்ச் அளவுள்ள சென்டர்-அலைன்ட் பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுடன் பிளாட் எப்எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக ஸ்மார்ட்போனில் பவர் பட்டனில் பதிக்கப்பட்ட சைடு மோவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.

பிராசஸர்

அட்ரினோ 610 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் ஹானர் எக்ஸ்7பி ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான மேஜிக் ஓஎஸ் 7.2 உள்ளது.

அல்ட்ராசோனிக் டிஸ்டென்ஸ் சென்சார், கைரோஸ்கோப், எலக்ட்ரானிக் காம்பஸ், பிராக்சிமிட்டி சென்சார் போன்ற சென்சார்கள் உள்ளன. 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்ற அம்சங்களும் உள்ளன.

கேமரா

இதில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய 108 எம்பி மெயின் கேமரா, 5 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றைக் கொண்ட டிரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா உள்ளது. இந்த கேமரா மூலம் 420 பிக்சல் முதல் 8K தெளிவுடன் வீடியோவை பதிவு செய்யலாம்.

ரூ.39,999 பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம்..50 எம்பி கேமரா.! ரெட்மியின் புதிய மாடல்.?

பேட்டரி

பேட்டரியைப் பொறுத்தவரையில், ஹானர் எக்ஸ்7பி போனில் 6000 mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி பொருத்தபட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 35 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த பேட்டரி மூலம் 18 மணிநேர வீடியோ பிளேபேக், 24 மணிநேர சமூக ஊடக உலாவுதல் அல்லது 69 மணிநேர இசை ஸ்ட்ரீமிங்கை வழங்க முடியும்.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

எமரால்டு க்ரீன், ஃப்ளோயிங் சில்வர் மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 2 வேரியண்ட்களில் உள்ளது. அதன்படி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்கள் உள்ளன.

இதன் ஆரம்ப விலை $249 (ரூ.20,721) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் எந்த சந்தையில் முதலில் கிடைக்கும் என்பது குறித்த எந்த தகவலையும் நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை. அதைப் பொறுத்து விலையானது மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்