சிவகுமார், சூர்யா மீது வழக்கு போட எனக்கு விருப்பமேயில்ல! இயக்குனர் அமீர் பேச்சு!

ameer about sivakumar and suriya

பருத்திவீரன் பட சமயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், இத்தனை வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த பிரச்சனை முடிந்த பாடு இல்லை. தன்னிடம் இருந்து பருத்திவீரன் படத்தை மிரட்டி வாங்கிவிட்டதாகவும், தனக்கு ஞானவேல் தயாரிப்பிலிருந்த்து பணத்தை பெற்று தரும்படியும் அமீர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார்.

அந்த வழக்கும் இன்னும் நிலுவையில் தான் இருந்து வருகிறது. இதனையடுத்து, ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அமீர் பணத்தை ஏமாற்றி சம்பாதிப்பதாக குற்றம் சாட்டி பேசி இருந்தார். இதனால் இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்த நிலையில், அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சினேகன், கஞ்சா கருப்பு ஆகியோர் பேசினார்கள்.

வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!

இந்த விவகாரம் குறித்து அமீர் பற்றி பேசியதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். இருந்தாலும் சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் இந்த விவகாரத்தில் தான் வழக்கு தொடரும் போது சிவகுமார், சூர்யா பெயரை கொடுக்கவேண்டாம் என்று தான் இருந்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் ” முதலில் இந்த வழக்கு நான் போடும்போது என்னுடைய விருப்பம் இல்லாமல் சிவகுமார் சார் மற்றும் சூர்யா  பெயரை என்னுடைய வக்கீல் சேர்த்துக்கொண்டார். நான் அவர்களுடைய பெயரை போடவே வேண்டாம் என்று தான் சொன்னன். எனக்கு அவர்கள் இருவருடைய பெயரை போட கூடிய விருப்பமும் இல்லை.

இந்த விவகாரத்தில் அவர்கள் இரண்டு பேரும் இல்லை அவர்களுடைய பெயரை சேர்க்காதீர்கள் என்று நான் சொன்னேன். ஆனால் வக்கீல் வேறு வழி இல்லை என்று அவர்களுடைய பெயரை சேர்த்தார்கள். வக்கீல் எடுத்த அந்த முடிவு தான் அடுத்த நாளில் பத்திரிகை செய்தியாக மாறியது. பத்திரிகை செய்தியாக மாறிய பிறகு அவர்கள் நான் தான் திட்டமிட்டு அவர்களுடைய பெயரை சேர்த்ததாக நினைத்தார்கள்.

அமீர் அண்ணனை ஏமாத்திட்டாங்க! கொந்தளித்த கஞ்சா கருப்பு!

பிறகு நீதிபதியே இந்த விவகாரத்தில் சூர்யா, சிவகுமார் பெயர் கிடையாது அவர்களுடைய பெயரை சேர்க்கவேண்டாம் இருவருடைய பெயரை எடுத்துவிட்டு வழக்கு தொடருங்கள் என்று கூறினார். வக்கீல் பேச்சை கேட்டதால் தான் நான் குற்றவாளியாக மாறிவிட்டேன். என்னுடைய பேச்சை கேட்டு இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காது” எனவும் இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்