தங்க நிறத்தில் தக தகவென மின்னும் த்ரிஷா.! உயிர் என்றும் உங்களுக்கு தான் தேவி.!

Trisha Krishnan

தமிழ் திரை உலகில் 23 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் தொடர்ந்து விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்தார்.

இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து திரிஷா, மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கருத்தால் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறார். இதற்கிடையில் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சிவப்பு நிற உடை அணிந்து ஒரு பொம்மை போல இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைபப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் எடுத்த புகைப்படங்களை தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் தங்க நிற சேலை அணிந்து, பொன்னியின் செல்வன் குந்தகையின் மறு உருவமாக உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை குறிப்பிட்டு ‘உயிர் உங்களுடைய தேவி’, ‘அவள் உலக அழகியே’ என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

மேலும், நடிகை திரிஷா அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் இயக்குனர் வசிஷ்டா இணைந்து உருவாக்கும் படத்திலும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்