தமிழ்நாட்டில் உள்ள போலீசாரை நான் திமுகவினர் என்று கூறவா..? – தமிழிசை
மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார்.
15 மணி நேர விசாரணைக்கு பின் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரி கைது.. FIRல் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்கள்!
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் தமிழிசை, ஆளுநர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ இவர்கள் எல்லாம் பா.ஜ.க என்றால் தமிழ்நாட்டில் உள்ள போலீசாரை நான் திமுகவினர் என கூறவா? பிரச்னை ஒரு நபர் மீது இருக்கலாம் அதனால் துறையையே குறை கூறக்கூடாது.
அமைச்சர் ஒருவர் வீட்டில் கட்டுகட்டாக பணம் எடுத்தார்கள் அதனால் அனைத்து அமைச்சர்களின் வீடுகளிலுமா சோதனை நடந்தது? அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்வது என்பது தமிழ்நாடு அரசின் தவறான முன்னுதாரணம். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.