ஆதித்யா எல்1 விண்கலம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது இஸ்ரோ!
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா-எல் 1 விண்கலம் சூரியக் காற்றின் துகள் பரிசோதனையின் (ASPEX) 2ஆவது கருவி செயல்பட தொடங்கியது என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் சாதனை படைத்த சந்திரயான் 3 விண்கலம் வெற்றியை தொடர்ந்து, கடந்த செப்.2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, ‘பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட்’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பின்னர், பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருக்கக்கூடிய அடுக்குகள் கழற்றிவிடப்பட்டு, 648 கி.மீ உயரத்தில், ஆதித்யா-எல்1 விண்கலம் பிரிக்கப்பட்டு, வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பூமியிலிருந்து சுமார்15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1 (எல்-1) நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. இதன்பிறகு, ஆதித்யா எல்1 விண்கலத்தின் மூன்று கட்ட புவி சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.
அதுபோல், ஆதித்யா-எல்1 விண்கலத்தின் சோலார் பேனல்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, 16 நாட்களாக பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து மெதுவாக உயர்த்தப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த சமயத்தில்,ஆதித்யா-எல்1-லிருக்கும் STEPS கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் உள்ள அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிட்டது.
அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்துவிட்டது.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம்!
இந்த ஆய்வு முடிவுகளை இஸ்ரோ சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், ஆதித்யா விண்கலம் பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. சூரியன்-பூமி லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) நோக்கி அதன் பாதையில் செல்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சூரியக் காற்றின் துகள் பரிசோதனையின் (ASPEX) 2ஆவது கருவி செயல்பட தொடங்கியது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதாவது, விண்கலத்தில் 7 கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கருவிகளில் இரண்டாவது கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) என்ற கருவி தற்போது செயல்பட தொடங்கியுள்ளது என்றும் ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டு வருவதாகவும் தகவல் இஸ்ரோ தெரிவிக்கப்பட்டுள்ளது.