இது மனித தவறு..! அமலாக்கத்துறையின் தவறு அல்ல – அண்ணாமலை

annamalai

மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சிக்கினார்.

இந்த நிலையில், 15 மணி நேர விசாரணைக்கு பின்  திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்தியதையடுத்து, திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் 14 மணிநேரமாக தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதையடுத்து, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய, விடிய லஞ்சஒழிப்பு துறை சோதனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், இது மனித தவறு தான். அமலாக்கத்துறையின் தவறு அல்ல. தனிமனித தவறுக்கு அமலாக்கத்துறையை குற்றம் சொல்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். லஞ்சம் வாக்கியவர்களை கைது செய்ததற்கு லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு முழு அதிகாரம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்