அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

Heavy rain in tamilnadu new cyclone form in bay of bengal

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒருசில நாட்களில் புயலாக வலுப்பெற உள்ளது.

இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிக்ஜாம் புயலால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 3-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று 4-ஆம் தேதி மாலை கரையை கடக்கும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகும் புயல் 5-ம் தேதி முற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் – மசூலிபட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், புதுக்கொட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி ஆகிய 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்