பொதுமக்கள் கவனத்திற்கு..! இன்று தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் மருத்துவ முகாம்..!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் பலர் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மழைகாலங்களில் பரவக்கூடிய, மலேரியா, டெங்கு, டைபாயிடு போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு தரப்பில், அனைத்து மாவட்டங்களிலும், தூய்மை பணியாளர்கள் கொசுவை ஒலிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு, ஒவ்வொரு வீடுகளிலும் கொசு உருவாகாத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் கண்டனம்! 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல்!
இந்த நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னை மாநகராட்சியில் 100 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இன்று விரிவான மருத்துவ காப்பீடு முகாமும் நடைபெற உள்ளது. அதன்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் 100 இடங்களில் இன்று நடைபெற உள்ளது. விரிவான மருத்துவ காப்பீட்டு முகாம் இன்று காலை 8 மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடைபெறுகிறது.
சென்னையில் ராயபுரம், அடையார், மயிலாப்பூர், அயனாவரம், நீலாங்கரை உள்ளிட்டு ஐந்து இடங்களில் இந்த காப்பீடு முகாம் நடைபெறுகிறது. புதிதாக திருமணமானவர்கள், விடுபட்டவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம்.