ஆர்டர் பிச்சிக்க போது..ரூ,5,000 வரை விலையை குறைசிட்டாங்க,! நத்திங் நிறுவனம் அதிரடி.!
தனது ஸ்மார்ட்போனின் வெளிப்படையான பின்புறத்தைக் கொண்டு மக்களை பெருமளவில் கவர்ந்த நத்திங் டெக்னாலஜி, இரண்டாவது ஸ்மார்ட்போனான நத்திங் ஃபோன் 2 -ஐ இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் நத்திங் ஃபோன் 2-ன் விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. ஏனென்றால், நத்திங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை சுமார் ரூ.5,000 குறைத்துள்ளது. இதனால் நத்திங் ஃபோன் 2 ஸ்மார்ட்போனின் விற்பனை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலைக் குறைப்புக்கு பின்
நத்திங் ஃபோன் (2) மூன்று வேரியண்ட்களில் அறிமுகமானது. இதில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.ரூ.44,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.49,999க்கும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.54,999க்கும் அறிமுகமானது.
ப்ளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகமான BoAt ஸ்மார்ட்வாட்ச்.! விலை என்ன தெரியுமா.?
இப்போது ரூ.5,000 விலைக் குறைப்பைத் தொடர்ந்து, 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.39,999-க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.ரூ.44,999-க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.ரூ.49,999-க்கும் விற்பனைக்கு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களை ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் வாங்கிக்கொள்ளலாம். மேலும், கனரா வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
டிஸ்பிளே
நத்திங் ஃபோன் (2) போனில் 2412 x 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் ஃப்ளெக்சிபிள் எல்டிபிஓ அமோலெட் டிஸ்ப்ளே (flexible LTPO AMOLED display) உள்ளது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
இதனால் கேம் விளையாடுவதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் ஸ்மூத்தாகவும் இருக்கும். வெயிலில் கூட தெளிவாக பார்க்க முடியும். பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ், நீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க ஐபி54 ரேட்டிங், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் வசதி உள்ளது.
பிராசஸர்
அட்ரினோ 730 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் நத்திங் ஃபோன் (2) ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.0 உள்ளது. அதோடு 3 ஆண்டுகளுக்கு ஆன்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறை செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும்.
ஃப்ரன்ட் மற்றும் ரியர் அம்பியன்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ், கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார், சென்சார் கோர் போன்ற சென்சார்கள் உள்ளன. வைஃபை 6, புளூடூத் 5.3, 5ஜி, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்ற அம்சங்களும் உள்ளன.
இந்தியாவில் களமிறங்கும் ஒன்பிளஸ் வாட்ச் 2.! எப்போ வெளியீடு தெரியுமா.?
கேமரா
நத்திங் ஃபோன் (2) ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமரா மூலம் 720 பிக்சல் முதல் 4K தெளிவுடன் வீடியோவை பதிவு செய்யலாம். இதில் நைட் மோட், போர்ட்ரைட் மோட், மோஷன் போட்டோ, சூப்பர் ரெஸ் ஜூம், ஏஐ சீன் டிடக்ஷன், எக்ஸ்பேட் மோட், பானோரமா, பானோரமா நைட் மோட், டாக்குமெண்ட் மூடு போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.
பேட்டரி
201.2 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்த 4700 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், 15 வாட்ஸ் க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங் வசதியும், 5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது
இதில் வயர்டு சார்ஜிங் மூலம் 55 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். அதைப்போல வயர்லெஸ் சார்ஜிங் 130 நிமிடங்களில் முழுவதுமாக பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.