ரேஷன் பொருட்கள் வாங்குவதிலும் முறைகேடா? தடுக்குமா தமிழக அரசு – வானதி சீனிவாசன்
ரேஷன் பொருட்கள் வாங்குவதிலும் முறைகேடா? தடுக்குமா தமிழக அரசு என கேள்வி எழுப்பி வானதி சீனிவாசன் அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பை வாங்காமல் கனடா மஞ்சள் பருப்பை அதிக விலை கொடுத்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வாங்க உள்ளதாக தகவல்கள் வருகிறது என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் – முதல்வர் அமர்ந்து பேச வேண்டும் – உச்சநீதிமன்றம்
தொடர்ந்து, வெளிச்சந்தையில் துவரம் பருப்பு விலை குறைய உள்ள நிலையில் அதிக விலை கொடுத்து கனடா பருப்பை வாங்குவதன் நோக்கம் என்ன? 60000 டன் பருப்பை கிலோ 134 ரூபாய்க்கு வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசிற்கு, 60 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மேலும் நாடு முழுதும் துவரை அறுவடை துவங்கியுள்ளது. அடுத்த மாதத்தில் புதிய துவரம் பருப்பு வெளிச்சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த நிலையில் 3 மாதத்திற்கு தேவையான 60000 டன் பருப்பு வாங்க வேண்டியதன் அவசியம் என்ன? என தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.