தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவு! 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? டிச.3ல் ரிசல்ட்…

5 state election

நாட்டில் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சில நாட்களில் நடைபெற்று முடிவடைந்தது. இன்று, தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணியுடன் நேரம் முடிவடைந்தது.

இன்று காலை முதல் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த நிலையில், தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. 5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

எனவே, தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது.

அப்போது, இந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. பின்னர், முக்கிய நிர்வாகி கட்சி மாறி ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், மிசோரம் மாநிலத்தில் சொராம்தங்காவின் எம்.என்.எப் கட்சியும், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ் (பி.ஆர்.எஸ்) கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தனர்.

சுரங்க விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி!

இந்த சூழலில் 5 மாநிலங்களில் ஆட்சி காலம் இந்த ஆண்டுடன் நிறைவடையும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. அதன்படி, மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவ.7ம் தேதியும், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நவ.7ம் மற்றும் 17ம் தேதிகளிலும்,மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவ.17ம் தேதியும், ராஜஸ்தானில் நவ.23ம் தேதியும், தெலுங்கானாவில் இன்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவு பெற்றது.

இந்த 5 மாநிலங்களில் பெரும்பான்மையாக பாஜக, காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவுகிறது. ஒரு தரப்பினர் 5 மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், மற்றொரு தரப்பினர் பாஜக எழுச்சி பெறும் எனவும் கூறி வருகின்றனர். இந்த தேர்தல் மக்களவை தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்பதால் அனைவரும் உன்னிப்பாக பார்த்து வருகின்றனர்.

தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் மக்களிடம் கருத்துக்களை பெற்று வெளியிடப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அரசியல் கட்சிகளாலும், பொதுமக்களாலும் உன்னிப்பாக நோக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், 5 மாநில தேர்தல் குறித்து பல்வேறு ஊடகங்கள், கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதில், சத்தீஸ்கர், தெலுங்கனா, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் , ராஜஸ்தானில் பாஜக, மிசோராமில் மாநில கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த கணிப்பில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே, 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பது டிசம்பர் 3 ஆம் தேதி தெரிந்துவிடும் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
virender sehwag ms dhoni
iran trump
MIvsKKR
Sekarbabu
sengottaiyan
Ruturaj Gaikwad