ஸ்லேட் குச்சி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா.? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..

slate pencil

நூற்றில் பத்து சதவீதம் மக்களுக்கு இந்த திருநீறு மற்றும் சிலேட்டு குச்சிகளை சாப்பிடும் பழக்கம் உள்ளது. அதிலும் செங்கல், பல்பொடி, பெயிண்ட், மண் என அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக இந்த திருநீறு மற்றும் சிலேட்டு குச்சி சாப்பிடுபவர்களே அதிகமாக உள்ளனர். இதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அதிலிருந்து எவ்வாறு விடுபடலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். ஸ்லேட் குச்சிகள் எழுத பயன்படுகிறதோ இல்லையோ, ஆனால் சிலருக்கு சாப்பிட நன்றாகவே பயன்படுகிறது.

விபூதி தயாரிக்கும் முறை

நாட்டுப் பசு மாட்டின் சாணத்தை மண்ணில் விழுவதற்கு முன்பே எடுத்து உருண்டைகளாக பிடித்து அதற்கு உண்டான அடுப்புகளில் வைத்து புகை மட்டுமே வெளியே செல்லும்படி பிரத்யோகமான முறையில் தயாரிக்கப்படுகிறது.

ஜாக்கிரதை..! இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்..!

ஆறிலிருந்து ஒன்பது நாட்கள் வைக்கப்பட்டு அது வெண்ணிறமாக மாறிய பிறகு, அதை பவுடராக செய்து திருநீராக கொடுக்கப்படுகிறது. மாட்டு சாணத்தில் தயாரிக்கப்பட்ட இந்த விபூதி நல்ல மணம்  என்பது வராது. ஒருவேளை வருகிறது என்றாலும் சுவையாக உள்ளது என்றாலும் அதில் ஜவ்வாது மற்றும் டோலோமேட் என்ற சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த டோலோமேட்  மண்ணிலிருந்து கிடைக்கக்கூடியது என்பதால் இதில் அலுமினியம் ,லெட் , மெர்குரி, நிக்கல் போன்ற கனமான உலோகங்கள் கலந்து இருப்பதால் அது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே திருநீறு சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல, திருநீரை  நெற்றியில் வைப்பதே சிறந்தது.

ஸ்லேட் குச்சிகள்

இந்த குச்சிகளை ஏதோ முறுக்கு சாப்பிடுவது போல் நொறுக் நொறுக் என்று சிலர் கடித்து சாப்பிடுவார்கள். இதில் அதிக அளவு சுண்ணாம்பு சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இந்தச் சுண்ணாம்பு நம் உடலுக்கு உகந்தது அல்ல. குறிப்பாக இது வயிற்று பகுதியில் புண்களை ஏற்படுத்தும், சிறுநீரக செயலிழப்பையும் ஏற்படுத்தும்.

வயிற்றுப் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி காய்.! இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா யாரு வேண்டாம்னு சொல்லுவா.?

அது மட்டுமல்லாமல் உடலில் பல உடல் உறுப்புகளையும் பாதிப்படையச் செய்யும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் மற்ற சத்துக்களும் உறிஞ்சப்படாமல் தடுக்கப்படுகிறது. எனவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் நிலை உண்டாகும்.

இதை அதிகம் பயன்படுத்துபவர்கள்

கர்ப்பிணிப் பெண்கள், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், போதிய பராமரிப்பு இல்லாத குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பள்ளி செல்லும் குழந்தைகள்.

இதிலிருந்து வெளிவர நாம்  செய்ய வேண்டியவை

வைட்டமின் சி நிறைந்த உணவுகளான ஆரஞ்சு, லெமன், நெல்லிக்காய் போன்றவற்றையும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள கீரை வகைகள், முட்டை, ஆட்டு ஈரல், பேரிச்சம்பழம் போன்றவைகளையும் புரதம் நிறைந்த உணவுகளான பால், மீன், முட்டை, மாமிசம் போன்றவற்றையும் நாம் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது இந்த பழக்கங்கள் படிப்படியாக குறைக்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் குடும்ப நபர்கள் அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை கூறி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதற்கு அடிமையாக உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசிப்பதை சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்