கணக்கில்லாத கவர்ச்சி காட்சிகள்! அந்த மாதிரி வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ்?

keerthi suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க வந்த ஆரம்ப குறுகிய காலத்திலே மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம். ஒரு சமயத்தில் எல்லாம் கீர்த்தி சுரேஷிற்கு தொடர்ச்சியாக பெரிய பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து வந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை சில காரணங்களால் குறைத்தார்.

அவர் உடல் எடையை குறைத்த பிறகு அவருக்கு பட வாப்புகள் குறைய தொடங்கிவிட்டது என்றே கூறலாம். கடைசியாக இவர் தமிழில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக நடிகை கீர்த்தி சுரேஷ் 5 படங்கள் கிட்ட கை வசம் வைத்து இருக்கிறார்.

பட வாய்ப்புகளே இல்லை! கவர்ச்சி நடிகையுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்?

அந்த வகையில், அவர் அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைபோல, ரகுதாதா, வானவில், ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களும் இவருடைய நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக அட்லீ இந்தியில் தயாரிக்கும் ஒரு படத்திலும் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் ஆக நடிக்கவுள்ளாராம்.
அது மட்டுமின்றி கீர்த்தி சுரேஷ் பிரபல கவர்ச்சி நடிகையான ராதிகா ஆப்தே உடன் இணைந்து அக்கா என்ற வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாகவும் முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் அந்த வெப் சீரிஸை தர்மராஜ் ஷெட்டி என்பவரை இயக்கி வருகிறார். இந்த தகவல் ஏற்கனவே எல்லாருக்கும் தெரிந்த ஒரு தகவல் தான்.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே இருவரும் இணைந்து நடிக்கும் இந்த அக்கா வெப் சீரிஸில் கவர்ச்சியான காட்சிகள் அதிகமாக இருக்கிறதாம். எனவே, இந்த மாதிரி கவர்ச்சியான காட்சிகள் கொண்ட வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

ஆனால், கவர்ச்சியான காட்சிகளில் அவர் நடிக்க வாய்ப்பு குறைவாக தான் இருக்கும் மற்ற நடிகைகளை வைத்து கவர்ச்சி காட்சிகள் அதிகமாகி இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த வெப் சீரிஸில் என்னென்ன பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்