மீண்டும் படுமோசமடையும் காற்றின் தரம்… மழையை எதிர்பார்க்கும் டெல்லி மக்கள்.!

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதனால் டெல்லி மாநில அரசு செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. அதற்கிடையில் டெல்லியில் பெய்த மழை காரணமாக காற்றின் தரம் சற்று உயர்ந்து காற்றின் தரம் மிக மோசமான நிலை என்றதில் இருந்து மோசமான நிலை என்றானது.
இப்படி ஏற்ற இறக்கங்களாய் சந்தித்த டெல்லி காற்றின் தரத்தை கடந்த ஒரு மாத கால சராசரியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்த நவம்பர் 1 முதல் நேற்று 29ஆம் தேதி வரையில் டெல்லியின் காற்றின் மாசு அளவீடானது 372ஆக பதிவாகி இருந்தது.
சீனாவின் சுவாச நோய்த்தொற்று.. இந்தியாவில் 6 மாநிலங்களில் எச்சரிக்கை!
இந்த அளவீடானது கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மூன்றாவது அதிக மாசுபட்ட மாதமாக இந்த நவம்பர் மாதம் ஆகியுள்ளது. நவம்பர் 1 மற்றும் 29 க்கு இடையில் டெல்லியின் சராசரி அளவான 372ஆனது 2016இல் 373 மற்றும் 2021ஆம் ஆண்டு 378க்கு பின் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றின் தரத்தை சற்று மேம்படுத்த, படுமோசமான நிலை என்பதில் இருந்து மோசமான எனும் நிலைக்கு கொண்டு வர லேசான மழை எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரம் கடுமையான வகைக்கு மோசமடைந்தது. 420 என்ற அளவீட்டில் காற்றறின் தரம்பதிவானது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, டெல்லியின் பிரதான மேற்பரப்பு காற்று வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 6கிமீ வேகத்தில் வீசக்கூடும். இதன் மூலம் லேசான மழை பெய்யவாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை, டெல்லி மேற்பரப்பில் காற்று வடக்கில் இருந்து மணிக்கு 6 முதல் 8கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லேசான மழைப்பொழிவு இருக்குமாயின் டெல்லி காற்றின் தரம் சற்று அதிகமாகும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025