ஒரே தேதியில் 4ஜி மற்றும் 5ஜி.! ரெட்மியின் புது மாடல் என்ன தெரியுமா.?

Redmi 13C 5G

50 எம்பி கேமரா மற்றும் 8ஜிபி ரேம் உடன் வெளிவரக்கூடிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனை உறுதி செய்து ரெட்மி அறிமுக தேதியை வெளியிட்டது. அதன்படி, ரெட்மி 13சி டிசம்பர் 6ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் ரெட்மி நிறுவனம் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ரெட்மி 13சி போனின் 5ஜி வேரியண்ட்டும் அதே டிசம்பர் 6ம் தேதியில் உலகளவில் அறிமுகமாகும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக ரெட்மி 13சி 4ஜி ஆனது நைஜீரியாவில் அறிமுகமானது.

இப்போது அதன் 4ஜி வேரியண்ட் இந்தியாவிலும், 5ஜி வேரியண்ட் உலகெங்கிலும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் எந்த தளத்தில் வெளியாகவுள்ளது என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

5,000mAh பேட்டரி..8ஜிபி ரேம்..டூயல் ஸ்பீக்கர்ஸ்.! இந்தியாவில் அறிமுகமாகும் டெக்னோ மாடல்.?

டிஸ்பிளே

ரெட்மி 13சி போனில் 1600×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.74 இன்ச் டாட் டிராப் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 முதல் 600 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதே டிஸ்பிளே ரெட்மி 13சி 5ஜி போனில் பயன்படுத்தப்படலாம். பாதுகாப்பிற்க்காக கார்னிங் கொரில்லா கிளாஸ், சைடு மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் வசதி உள்ளது.

பிராசஸர்

ஆர்ம் மாலி-ஜி52 எம்சி2 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 எனும் 4ஜி சிப்செட் ஆனது ரெட்மி 13சி போனில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் ரெட்மி 13சி 5ஜி போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரியல்மீ 11 5ஜி மற்றும் ரியல்மீ 11X 5ஜி இல் இருக்கும் அதே பிராசஸர் ஆகும்.

மேலும், ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எம்ஐயுஐ 14 உள்ளது. விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சார், அம்பியண்ட் லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன.

கேமரா

இப்போது வெளியாகியுள்ள டீஸர் புகைப்படத்தை வைத்துப் பார்க்கையில், ரெட்மி 13சி 5ஜி போனில் டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா மற்றும் ஏஐ அம்சத்துடன் கூடிய 2 எம்பி டெப்த் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்புறம் செல்ஃபிக்காக 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் முன்புறம் மற்றும் பின்புறத்திலும் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்ய முடியும். ஃபிலிம் மோட், எச்டிஆர் மோட், நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், 50 எம்பி மோட் போன்ற கேமரா அம்சங்களுடன் வரலாம்.

இந்த ஒரு AI போதும்.? ஒரே போட்டோவில் எளிதில் கிராஃபிக்ஸ் செய்யலாம்.!

பேட்டரி

192 கிராம் எடை கொண்ட ரெட்மி 13சி போனில், அதிக நேர பயன்பாட்டிற்காக 5000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ரெட்மி 13சி 5ஜி போனிலும் 5000 mAh பேட்டரி பொருத்தப்படலாம். இதனை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனை வாங்கும்போது அதன் பாக்சில் 10 வாட்ஸ் சார்ஜர் இருக்கும். 18 வாட்ஸுக்கான சார்ஜ்ர் மொபைல் ஸ்டோர்களில் விற்கப்படுகிறது.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

ஸ்டார்ஷைன் க்ரீன், லிலாக் (இளஞ்சிவப்பு) மற்றும் ஸ்டார்டஸ்ட் பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகமாக உள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜுடன் வரலாம். இதன் விலை ரூ.15,000 ஆக இருக்கலாம். ரெட்மி 13சி 5ஜி எம்ஐ.காம் மற்றும் அமேசானில் விற்பனைக்கு வரும்.

ரெட்மி 13சி 4ஜி க்ளோபெல் வேரியண்ட் ஆனது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என 3 மாடல்களில் உள்ளது. இதில் 4ஜிபி ரேம் வேரியண்ட் (ரூ.10,100) என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் (ரூ.11,200) என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் (ரூ.12,500) என்ற விலையிலும் விற்பனைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu
IND vs PAK
dragon movie box office