சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்கள் எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமா அப்போ இந்த பதிவை படிங்க..
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே நம் உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். அந்த வகையில் பலருக்கும் பழங்களை சாப்பிடுவதில் ஒரு பயம் இருக்கும் அதைப் போக்கும் வகையில் இந்தப் பதிவு அமைந்திருக்கும்.
பழங்கள் எடுத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு அதிகமாகும் என்பது சரிதான். ஆனால் அதில் உள்ள விட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நம் உடலுக்கு தேவையான ஒன்று அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
வைட்டமின் குறைபாடு
ஒரே ஒரு குறிப்பிட்ட பழத்தையே அதிகமாக எடுத்துக் கொள்வது மற்றும் பழங்களையே முற்றிலும் தவிர்ப்பது என்பது மிக தவறான ஒன்று. இதனால் விட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டு பல நோய்கள் இணைப்பாக வந்து விடும்.
ஒரே பழத்தையே எடுத்துக் கொண்டால் அதில் உள்ள குறிப்பிட்ட சத்து மட்டுமே நமக்கு கிடைக்கும் இது நம் உடலுக்கு உகந்தது அல்ல.
நம் உடல் நலத்திற்கும் ரத்த ஓட்டத்திற்கும் பழம்எடுத்து கொள்வது மிகவும் அவசியமானது. 2014 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேசனில் இருந்து வந்த ஒரு ஆர்ட்டிகளின் படி தங்களின் அன்றாட உணவு முறையில் பழங்களை சேர்த்து வந்தால் டைப் 2 நீரிழிவு வருவதை தடுக்கலாம் என ஆராய்ச்சி கூறுகிறது.
ஒருவேளை சர்க்கரை வியாதி உள்ளது என்றால் அது என்னவென்று முழுமையாக தெரிந்து கொள்ளாமலே வாழ்நாள் முழுவதும் மருந்துகளே எடுத்துக் கொள்வதில் தயாராக இருக்கிறோம்.அதற்கு மாறாக எதை தவிர்க்க வேண்டும் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் இன்று புரிதலுக்கு வரவே தாமதிக்கின்றோம்.
பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறை
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் நாம் சாப்பிடும் உணவுடன் சேர்த்து ஒரு பழம் எடுத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு அதிகரித்து விடும். இதற்கு மாற்றாக ஒருவர் நான்கு இட்லி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அதில் இரண்டை குறைத்துக் கொண்டு இரண்டு இட்லியுடன் அரை பகுதி பழம் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது ஒரு கப் சாதம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அரை கப் சாதம் மற்றும் ஏதேனும் ஒரு அரை பழம் எடுத்துக் கொள்ளலாம்.
அசத்தலான ஆலு சமோசா செய்வது எப்படி..?
இவ்வாறு எடுத்துக் கொண்டால் சரிவிகித உணவாகிவிடும் இதுதான் சிறந்ததாகும். இதனால் நம் உடலில் ஏற்படும் விட்டமின் மற்றும் மினரல் பற்றாக்குறை தீர்ந்து உடல் சோர்வு ஏற்படுவதையும் தவிர்க்கலாம். பழங்களை நாம் மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு பழத்தில் இருக்கும் சத்து மற்றொரு பழத்தில் இருக்காது.
1 மாதுளையில்= 15 – 20 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 1கருப்பு திராட்சையில்= 10 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 1 மாம்பழத்தில்= 30 -40 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது ஆனால் ஒரு கப் சாதத்தில் 120 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது இதில் எதை எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஜூஸ் ஆக எடுத்துக் கொள்ளலாமா அல்லது பழமாக எடுத்துக் கொள்ளலாமா?
பழங்களை ஜூஸாக எடுத்துக்கொண்டால் கிளைசிமிக் அதிகமாகி ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும். பழங்களை மென்று அப்படியே கடித்து சாப்பிடுவதே சால சிறந்தது. வைட்டமின் சத்துக்களுடன் நார்ச்சத்தும் சேர்ந்தே கிடைக்கும்.
தவிர்க்க வேண்டியவை
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பழங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. மா ,பலா, வாழை போன்ற முக்கனிகளில் அதிக கலோரி இருப்பதால் அதிக அளவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மல்டி விட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில் தயாராக இருக்கிறோம் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கும் தயாராக இருக்கிறோம் ஆனால் உணவில் சில மாற்றங்களை பின்பற்ற தயாராக இருப்பதில் தாமதிக்கின்றோம் மருந்துகளுக்கும் மருந்து கடைகளுக்கும் வாடிக்கையாளராக இல்லாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம