வானத்துல பறக்கும் 108- டும் இருக்கா..! நல்லா இருக்கு..!!ஆஸ்திரேலியாவில் அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

Default Image

தமிழகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை  குறித்த தகவல் பரிமாற்றத்துக்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.சுகாதாரத்துறை சம்பந்தமான பல கோப்புகள் கையெழுத்தாகியுள்ளன.
Health Department signs pact with Victorian govt.
அந்நாட்டின் விக்டோரியா மகாணத்தில் விபத்துக்கால சிகிச்சை அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் ஏர் ஆம்புலன்ஸ் சேவையை  விஜயபாஸ்கர் பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மூலமாக நோயாளிகளை  நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்கும் ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவைப் பிரிவையும், இரவு நேரங்களில் இயங்கக்கூடிய ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை குறித்த தொழில் நுட்பங்களையும் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
தமிழகத்தின் தாய்ப்பால் வங்கித் திட்டம் உலக அளவில் மிகச்சிறந்த திட்டம் எனவும், விக்டோரியா மகாண சுகாதாரத் துறை அமைச்சர் ஜில் ஹென்னசி, பாராட்டியதாகவும் தமிழக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்