பெண்களே வாருங்கள் உலகமே உங்களுக்காக காத்திருக்கிறது… முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

mk stalin

திருப்பூர் வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதன்பின் உரையாற்றிய முதலமைச்சர், தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும், எழுச்சியும் வருகிறது. உடல்நிலையை கருத்தில் கொண்டு காணொளிக்காட்சி மூலம் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன்.

நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் காணொலி மூலம் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. தீரன் சின்னமலை பெயரை கல்லூரிக்கு வைத்ததற்கு பாராட்டுகள். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்லூரி கட்ட ஏற்பாடு செய்து கட்டி முடிக்கப்பட்டது. திருப்பூர் பகுதியில் உள்ள பெண்களுக்கான கல்லுரியாக இன்று மாறியுள்ளது. திமுக ஆட்சியில் தான் திருப்பூருக்கு 2 பெண்கள் கல்லுரி தொடங்கப்பட்டது.

கொங்கு சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமாக மாற்றியவர் கலைஞர். தமிழ்நாடு மாணவர்கள் உலகமெங்கும் சென்று சாதிக்க வேண்டும். திரும்பும் பக்கமெல்லாம் பள்ளியும், கல்லூரியும் உருவாக்கப்பட்டதால் இன்றைக்கு வீடுகள்தோறும் பட்டதாரிகள் வளம் வருகின்றனர். சமூக அமைப்புகளும் சேவை மனப்பான்மையுடன் பள்ளி, கல்லூரிகள் தொடங்கியுள்ளனர்.

41 உயிர்களை காத்த `எலி வளை’.. உலகமே திரும்பி பார்க்க வைத்த தமிழக நிறுவனம்!

அதனால்தான் கல்வி நீரோடை தடை இல்லாமல் நாடு முழுவதும் பாய்கிறது. இந்த கல்வி வாய்ப்பு எல்லாம் தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக்க வேண்டும். முக்கியமாக பெண்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். உயர்கல்விகளை பெண்கள் அதிகம் படிக்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிக்க தான் அரசி பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்படுகிறது  பெண்களுக்கு விடியல் பயணம் என்ற கட்டணமில்லா பேருந்து வசதியை செய்து கொடுத்துள்ளோம்.

என்னுடைய கனவு எல்லாம் தமிழக மாணவ, மாணவிகள் உலகமெல்லாம் சென்று சாதிக்க வேண்டும். நீங்கள் சாதிக்கிறதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைய வேண்டும். பெண்களை வீட்டுக்கு உள்ளே முடக்கும் காலம் எல்லாம் போய், பெண்கள் உலகை ஆளும் காலம் வந்துவிட்டது. வாங்க உலகம் உங்களுக்காக காத்திருக்கிறது, படித்து முன்னேறி வாங்க வரலாற்றில் உங்களுக்கான இடம் காத்திருக்கிறது. இதற்கெல்லாம் அரசை போலவே சமூக அமைப்புகளும் கல்வியும், மருத்துவத்திலும் சேவை ஆற்ற வேண்டும் என கேட்டுகொள்ளவதாக தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்