10 லட்ச ரூபாய் கேட்டு கேரளா சிறுமி கடத்தல்.! காவல்துறையின் துணிகர நடவடிக்கை.!

Abigail was found at Asramam Maidan in kollam

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மருதமோன்பள்ளி சாலையில் ஒயூர் பகுதியில் சாரா ரெஜி எனும் 6 வயது சிறுமி நேற்று மாலை சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மாலை வழக்கம் போல தான் செல்லும் டியூசனுக்கு அந்த சிறுமி, தனது 8 வயது சக மாணவனுடன் சென்றுள்ளார்.

அப்போது வெள்ளை நிற மாருதி டிசையர் காரில் வந்த ஒரு கும்பல் சிறுமியை மாலை 4.45 மணி அளவில் கடத்தியுள்ளது. அதனை 8 வயது சிறுவன் தடுக்க முற்பட்டுள்ளான். ஆனால் அந்த கும்பல் சிறுவனை தள்ளிவிட்டு சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக வந்த கொல்லம் மாவட்ட காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையில் அந்த சிறுமியின் தாயாரிடம் அந்த கும்பல் 10 லட்ச ரூபாய் தொகை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரங்கத்திற்குள்ளே ‘மினி’ மருத்துவமனை.. வேகெமெடுக்கும் மீட்பு பணிகள்.!

8 வயது சிறுவன் கூறிய அடையாளங்களை கொண்டும், சிசிடிவி காட்சிகள் கொண்டும்,  அந்த கும்பலில் ஒரு பெண் இருந்ததும், கார் விவரங்களையும் கொண்டு தேட ஆரம்பித்தது. அதில், இன்று அதிகாலை 6.30 மணியளவில் ஸ்ரீகண்டேஸ்வரம் பகுதியில் கார் வாஷிங் நிலையத்தில் ஒரு பையில் 500 ரூபாய் கட்டுகள் 19 எண்ணம் அதாவது 7.50 லட்ச ருபாய் இருந்துள்ளது. இதனை அடுத்து சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தான், ஒயூர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் கடத்தப்பட்ட சிறுமி நின்று கொண்டு இருப்பதாக  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆசிரம மைதானத்திற்கு சென்ற போலீசார் அந்த சிறுமியை மீட்டனர். தற்போது அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு சிறுமியின் பெற்றோரிடத்தில் அனுப்பி வைக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

இதுவரை 3 பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில்  2 பேர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டும், மர்ம நபர்களின் ஸ்கெட்ச் வரைபடத்தை கொண்டும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir